நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‛தி கேரள ஸ்டோரி' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அதா சர்மா நடித்திருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பயணப்பட்டு வந்தார் சுதிப்தோ சென். அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக சுதிப்தோ சென் கூறும்போது, “எனக்கு நீரிழப்பு மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். இன்று மாலைக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.




