100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? |

பிரபல கன்னட நடிகை அனுகவுடா. சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடித்து வரும் இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கெம்ப கவுடா, ஸ்கூல் மாஸ்டர், சுக்ரீவா, புனித் பாய்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் சாகர் தாலுகாவில் உள்ள கஸ்பாடியில் அனுகவுடாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து அந்த இடத்திற்கு அனுகவுடா அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அனுகவுடாவின் விவசாய நிலம் தங்களுக்கே சொந்தம் என்று சிலர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று கஸ்பாடிக்கு சென்ற அனுகவுடாவிடம் எதிர் தரப்பினர் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. எதிர்தரப்பினர் அனுகவுடாவை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அனுகவுடாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




