படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது , ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் கலர் போட்டோ பட இயக்குனர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மல்டி ஸ்டார் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ விஷ்வாக் சென் இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .