ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இன்று(மே 27) காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது என் மனதுக்கு இதமாக உள்ளது. அதோடு என் சகோதரி ரேவதி சுரேஷின் இயக்கும் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.