அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ராம்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அயலான்'. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்துடன் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
'ஜப்பான்' யார் ?, என அப்படத்திற்கான சிறிய முன்னோட்ட வீடியோ ஒன்றை கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே, 'அயலான்' படத்தின் டீசரை விரைவில் வெளியிடப் போகிறோம் என படத்தை வெளியிடும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு வர உள்ள தீபாவளி போட்டியை இப்போதே ஆரம்பித்து வைக்கிறார்கள்.