தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் ராம் சரண். அந்த நிகழ்வில் அவரது தந்தை மற்றும் நடிகர் சிரஞ்சீவி உழைப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் தந்தைக்கு 68 வயது ஆகிறது. இப்போது கூட அவர் நான்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவரும் ஒருவர். தினமும் காலை 5.30 மணிக்கு ஒர்க் அவுட் செய்து அதன் பிறகு தான் அவர் படப்பிடிப்புக்கு செல்வார். இந்த வயதிலும் அவர் இவ்வளவு உற்சாகமாக இருப்பது எனக்கு இன்னும் கடுமையாக உழைக்க மிகப் பெரிய ஊக்கம் தருகிறது " என்று தெரிவித்துள்ளார்.