சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
கடந்த 2013ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷ்யம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அதன் பின்னர் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு, அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சீனாவிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி முதல் பாகத்தை விட அதிக அளவில் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் தற்போது தென் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதே சமயம் இந்த ரீமேக் என்பது ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகத்தான் கொரிய மொழியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை இணைந்து தயாரிக்கும் பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஆந்தாலஜி ஸ்டுடியோஸ் இரண்டுமே திரிஷ்யம் படத்தை ஹிந்தி படம் என்றே குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு ஹிந்தி படம் முதல் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.