மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் | அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் |
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் கடந்த 2021ம் ஆண்டு, மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவர் ஷாருக்கான் மகன் என்பது போலீசுக்கு தெரியாது. பின்னர்தான் தெரியும். அதற்குள் தகவல் வெளியாகி விட்டது. இதனால் ஆர்யன் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஆர்யான் கான் விருந்தில் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. இதனால் ஆர்யன் கானை கோர்ட் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க விசாரணை அதிகாரி சமீர்வான்கடே தலைமையிலான விசாரணை குழு மொத்தமாக 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் அதன் முதல் கட்டமாக 50 லட்சம் வழங்கப்பட்டதாகவும் தற்போது சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். சமீர் வான்கடே தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.