2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

2002ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட பிரியங்கா சோப்ரா, சமீப காலமாக ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் லவ் அகைன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் லவ் அகைன் என்ற படத்தில் நடித்திருப்பதையொட்டி தனது பழைய டேட்டிங் நண்பர்கள் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதில் தன்னுடன் நடித்த நடிகர்களுடன் தான் டேட்டிங்கில் இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அவர்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். என்றாலும் அந்த உறவு தொடர முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
கடத்த 2013ம் ஆண்டு ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா டேட்டிங்கில் இருந்த போது டொரன்டோவில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அப்போது பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா எப்போதுமே எனது பெஸ்ட் பிரண்ட் என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். பாலிவுட்டில் அவர் 20 ஆண்டுகாலம் நடித்து வருகிறார். இந்தக்காலக்கட்டத்தில் அவர் ஷாரூக்கான், ஷாகித் கபூர் போன்ற நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
இந்த நிலையில்தான் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.