சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
உலக புகழ்பெற்ற 'டைம்' பத்திரிகையில் செய்தியாக, கட்டுரையாக இடம்பிடிப்பதே பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்ததவரை திரைப்படத்துறையில் இருந்து நடிகர் ஆமீர்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோர் இடம் பிடித்தனர். தற்போது இவர்கள் வரிசையில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'பதான்' படத்தின் மூலம் அவர் உலகளாவிய புகழை பெற்றிருக்கிறார். இதுதவிர ஹாலிவுட் படங்களில் ஹீரோயினாக, வில்லியாகவும் நடித்திருக்கிறார், ஆஸ்கர் விருது விழாவின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். 2018ம் ஆண்டு டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தீபிகா இடம் பெற்றிருந்தார். இப்படி பல வழிகளில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள தீபிகா டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்று புதிய கவுரவத்தை பெற்றிருக்கிறார்.
டைம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “உலகில் மனிதசக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை சுற்றியும், எனக்கு எதிராவும் நிறைய அரசியல் நிகழ்வுகள் இருந்தது. அதைப் பற்றி பேச வேண்டுமா என்று தெரியவில்லை. பத்மாவத் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு நான் எதிர்பாராதது. அது ஏன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஒரு பாடலும், ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருது வென்றது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவற்றை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.