ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட 32 ஆயிரம் பெண்களின் கதை. இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படம் திரையிடப்படவில்லை.
என்றாலும் வட இந்தியாவில் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சுமார் 20 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்கெண்ட் மாநில அரசுகள் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் கிடைத்திருக்கும் வரவேற்பின் அடிப்படையில் இந்த படத்தை இன்று முதல் 37 நாடுகளில் வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது.
இது குறித்து படத்தின் நாயகி அதா ஷர்மா தனது டுவிட்டரில் “எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது”என்று தெரிவித்துள்ளார்.