ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கடந்த 2005ல் தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கஜினி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செய்து இயக்கினார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலையும் வாரி குவித்தது.
ஹிந்தியில் இந்த படத்தை வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் இந்த படத்தை இந்தியா முழுவதும் வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஹிந்தியில் ஆமீர்கானை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அல்லு அரவிந்த், இப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போதும், எப்போதும் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்பட்டு அமீர்கானின் நட்பு வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின்படி லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு ரீமேக் படங்களில் நடிக்கும் எண்ணத்தையே ஆமீர்கான் கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.