அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வரும். சமீபகாலமாக கொலை மிரட்டல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் லண்டனில் இருந்து ஒரு மாணவர் சல்மான்கானுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சல்மான்காள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மெயில் அனுப்பியது லண்டனில் மருத்துவம் படிக்கும் ஹரியானாவை சேர்ந்த மாணவர் என்று கண்டுபிடித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அந்த மாணவரின் பெற்றோர், தங்கள் மகன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்தால் அவனது மருத்துவ படிப்பு நின்று, எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற கோரிக்கையுடன் அவர்கள் சல்மான்கானை அணுக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் மத்திய அரசு சல்மான்கானுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். “என்னை நோக்கி பல துப்பாக்கிகள் குறிவைத்துள்ளன” என்று அண்மையில் சல்மான்கான் கூறியதும் குறிப்பிடத்தக்கது.