நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் - காள மாடன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கபடி வீரர் மணத்தி கணசேனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.
வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி படம் அன்று திரைக்கு வருகிறது . இதையொட்டி இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பி உள்ளனர், படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக வெளியாகிறது.