நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. பொதுவாக அம்மாதிரியான போஸ்டர்களில் கதாநாயகனின் புகைப்படம் மட்டுமே இடம் பெறும். ஆனால், 'மாமன்னன்' முதல் பார்வை போஸ்டரில் வடிவேலுவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இப்படம் பற்றி இதற்கு முன்பு வெளியான சில போஸ்டர்களில் வடிவேலுவின் பெயர்தான் முதலில் இடம் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் கடைசியாகத்தான் படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதுதான் முதல் பார்வை போஸ்டரிலும் இருக்கிறது.
போஸ்டரைப் பார்க்கும் போது கமல்ஹாசன், சிவாஜிகணேசன் நடித்த 'தேவர் மகன்' ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வடிவேலு கம்பீரமாக அமர்ந்திருக்க, அவருக்குப் பக்கத்தில் உதயநிதி கத்தியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பார்வை போஸ்டர் வருவது பற்றிய ஒரு போஸ்டரை அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் வெளியிட்டிருந்தார்கள். அதிலும் வடிவேலு இடம் பெற்றிருந்தார்.
'மாமன்னன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலுவும் ஒரு 'மன்னன்' ஆக இருப்பாரோ ?.