100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
விஜய்யின் 67வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக அடுத்து விஜய் நடிக்க உள்ள அவரது 68வது படம் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய, பல நடிகர்களை வளர்த்துவிட்ட சூப்பர் குட் நிறுவனத் தயாரிப்பில்தான் விஜய் 68வது படம் உருவாகப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் சூப்பர் குட் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மகனான நடிகர் ஜீவா இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நேற்று ஜீவாவின் இன்ஸ்டாகிராம் தளத்தில் விஜய் ரசிகர் ஒருவர், “தளபதி 68 அப்டேட் கொடுணா” என்று கேட்டிருந்தார். அதற்கு 'விரைவில்' என பதிலளித்துள்ளார் ஜீவா. அது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 67வது படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே 68வது பட அப்டேட் வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் ஜீவாவுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், “பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா” ஆகிய படங்களில் நடித்துள்ளார் விஜய். 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் குட் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இப்படம் சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படமாக அமையும்.