'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் பலருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை இயக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். அப்படி இயக்கக் கிடைத்த வாய்ப்பு நிறைவேறாமல் போனால் அது மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தரும் என்பது மறுக்க முடியாதது.
அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடம் மார்ச் மாதம் 18ம் தேதி செய்திக் குறிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். அஜித்தின் 'துணிவு' படம் வெளியானதுமே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் அஜித்தின் 62வது பட இயக்குனர் என்பதையும் நீக்கி அதை விக்னேஷ் சிவன் உண்மையாக்கினார்.
இருந்தாலும் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்று எந்த ஒரு முறையான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, அஜித்தின் 62வது படமாக 'விடாமுயற்சி' பட அறிவிப்பை வெளியிட்டனர். படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறார் என்று வந்த தகவல்களும் உண்மையானது.
இந்நிலையில் 'விடாமுயற்சி' குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சியே எங்களுக்கு எல்லாம். எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு என்றும் நிரந்தரம். 'விடாமுயற்சி, அஜித் 62, மகிழ்திருமேனி சார், அனிருத், நீரவ் சார், லைக்கா, சுரேஷ் சந்திரா ஆகியோருக்கு வாழ்த்துகள்,” எனக் கூறியுள்ளார்.
அவருடைய இந்த வாழ்த்திற்கு அஜித் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளிக் கொடுத்து பாராட்டி வருகிறார்கள்.