பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான எஸ்.தாணு, ‛வி கிரியேஷன்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை 80களின் காலகட்டத்தில் இருந்து நடத்தி வருகிறார். சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் அடுத்து தயாரிக்கும் பிரமாண்ட திரைப்படம் வாடிவாசல்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, ‛நானே வருவேன் படத்திற்கு பதிலாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்த அந்தாதுன் படத்தை தமிழில் தனுஷ் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். அந்த படத்தின் உரிமையை பெற அந்த தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது அவர்கள் லாபத்தில் பெரும் தொகையை கேட்டதால் அப்போது அந்த படத்தை என்னால் தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தை தமிழகமெங்கும் நான் தான் வெளியிடுகிறேன் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.