ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! | நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன் | ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் | தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை? |
ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடித்திருக்கும் படம் பர்ஹானா. குடும்ப வறுமையை போக்க கால் செண்டருக்கு வேலைக்கு போகும் முஸ்லிம் பெண் சமூகத்திலும், குடும்பத்திலும் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம். ஒரு நாள் கூத்து, மான்ஸ்ட்ர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இதனை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.
கணவன் இறந்ததும் 3 மாதங்கள் வரை தனி அறையில் வைக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் குறித்த படமாக புர்கா என்ற படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் “இஸ்லாமிய பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பர்ஹானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் . அதேபோல் ஓ.டி.டி தளத்தில் சமீபத்தில் வெளியான புர்கா திரைப்படத்தையும் இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுனை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.