லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'பர்ஹானா'. டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். ரிலீஸ்க்கு முன்பே ஒரு மதத்திற்கு எதிரான படம் என்று பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் படக்குழுவினர் இப்படம் எந்த மதத்திற்கும் எதிரான படம் இல்லை என்று விளக்கம் தெரிவித்தும் இன்னும் இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை.
நேற்று திருவாரூரில் உள்ள தைலம்மை திரையரங்கில் இந்த படத்தை மாலை 6 மணி காட்சி திரையிடப்பட இருந்த நிலையில் இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் இந்த திரைப்படத்தை திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்திருந்தனர். அதனால் போலீஸார் திரையரங்க வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 'பர்ஹானா' படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், திருவாரூர் தைலம்மை திரையரங்கில் இந்த படத்திற்கான காட்சிகள் ரத்து என்று தியேட்டர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.