'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விருபாக்ஷா. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றியடைவதால் தெலுங்கில் இவரை ராசியான கதாநாயகி என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் சம்யுக்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியது ; "எனக்கு ஒரு சிலரின் நடவடிக்கை சில நேரங்களில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். ஒரு முறை நானும் என் அம்மாவும் வெளியே சென்றோம். அப்போது அங்கு ஒரு நபர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.