பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
ஓடிடி வந்த பிறகு 'மொழி பாகுபாடு' சினிமாவில் மறைந்துவிட்டது என்று சினிமாவைச் சேர்ந்த சிலர் சொன்னார்கள். ஆனால், அந்தந்த மொழிப் படங்களை அதன் மொழியிலேயே பார்த்து ரசிப்பதைத்தான் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் விரும்புவார்கள். வேற்று மொழியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும் படங்களைக் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இரு மொழியில் படங்களை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு அதில் ஒரு மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தமிழ் ரசிகர்கள் புறக்கணிக்கிறார்கள்.
நேற்று வெளியான 'கஸ்டடி' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னார்கள். ஆனால், கதை நடப்பது முழுவதும் ஆந்திராவில். படத்தின் கதைக்களம், காட்சிகளில் இடம் பெறும் கடைகளின் பலகைகள், என அனைத்திலுமே தெலுங்கு வாசம் மட்டுமே வீசுகிறது. நடிப்பவர்கள் அனைவரும் தமிழில் பேசினால் மட்டும் போதுமா ?, படம் முழுவதுமே தமிழ் வாசம் இருக்க வேண்டமா என்ற கேள்வி எழுகிறது.
இப்படித்தான் இதற்கு முன்பு வெளிவந்த தனுஷ் நடித்த 'வாத்தி', சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்', ராம் பொத்தினேனி நடித்த 'த வாரியர்' ஆகிய படங்களையும் முழுக்க முழுக்க தெலுங்கு பின்னணியுடன் கூடிய தமிழ்ப் படமாகக் கொடுத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் ஏமாற்றின. அதே நிலைமை தற்போது 'கஸ்டடி' படத்திற்கும் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை தெலுங்கிலேயே எடுத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். வெங்கட் பிரபுவின் இமேஜும் பாதிக்கப்பட்டிருக்காது என்று மேலும் கூறுகிறார்கள். இனியாவது நம் இயக்குனர்கள் தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல் ஒரு குதிரையில் ஏறி பயணிப்பார்களா ?.