நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு |
மாநாடு படத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலமாக தனது படத்திற்கான ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்தநிலையில் அவர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளது, தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளது, அந்த படம் தமிழில் வெளியாக இருப்பது என எல்லாமாக இந்த புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமல்ல சமீபத்தில் வெளியான டிரைலர் கூட அந்த எதிர்பார்ப்பை கூட்டவே செய்துள்ளது.
ஆனால் இந்த டிரைலரை வைத்து எதுவுமே முடிவு செய்து விட வேண்டாம், படம் இன்னும் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு. அது மட்டுமல்ல, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் நாகசைதன்யா பேசும்போது, 'இந்த படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நகரும்.. 40வது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் இறுதிவரை ஒரே அதிரடியாக இருக்கும். குறிப்பாக பின்னணி இசையுடன் கூடிய ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக எங்களுடைய கஸ்டடிக்குள் வந்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார்.