மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வரும் ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை குறித்து இப்பட ஒளிப்பதிவாளர் வித்து அயனா பகிர்ந்துள்ளார். அதன்படி, "மாவீரன் படம் மண்டேலா படத்தை விட பல மடங்கு பெரிய படமாக உருவாகியுள்ளது. ஒரு சில முக்கிய காட்சிகளை 3D Rig என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எடுத்துள்ளோம். அதேபோல், விக்ரம் படத்தின் இடைவெளி காட்சிக்கு பயன்படுத்திய MOCOBOT கேமராவை இந்த படத்தில் சீனா சீனா பாடலுக்கு பயன்படுத்தியுள்ளோம். இந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் 50 பேர் முதல் 200 பேர் வரை நடித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.