டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் தனது காட்சிகள் நிறைவு பெற்றதாக மிஷ்கின் அறிவித்திருந்தார். சஞ்சய் தத், கவுதம் மேனன் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த அர்ஜுன் லியோ படப்பிடிப்பில் இன்று முதல் இணைகிறார். அதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே அவருக்கு டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது அதில் அர்ஜுன்-க்கு செயற்கையான முறையில் மேக்-அப் பயன்படுத்தி உள்ளனர்.