பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக, இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது சென்னை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே புரத்தில் வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் ‛மலக்குழு மரணம்' என்ற தலைப்பில், விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார். அதில், கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் ஹனுமனை அவதூறு செய்தும், இழிவுபடுத்தியும் கவிதை வாசித்தார். இது ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட சுரேஷ் மீது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில், கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விடுதலைசிகப்பி மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.