'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். அது மட்டுமல்ல சமீபத்தில் நடந்து முடிந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கிலும் அவரது தெலுங்கு வாரியர்ஸ் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியுடன் செல்பி எடுத்துக் கொண்டது பற்றி தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து டுவீட் செய்துள்ளார்.
“எனது மனிதர், எனது கிரிக்கெட் கடவுள், நம்முடைய எம்எஸ் தோனி. எனது கனவு உண்மையில் நனவானது. எனது இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. உங்களது மில்லியன், பில்லியன் உண்மையான ரசிகர்களில் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தியதற்கு நன்றி அன்பான தோனி. இது நடந்ததற்குக் காரணமான, மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழாவில் தமன் கலந்து கொண்ட போது இப்புகைப்படத்தை எடுத்துள்ளார்.