ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
இசை ரசிகர்களைக் கவர்ந்த ஆல்பமாக 'பொன்னியின் செல்வன் 1' மற்றும் 'வாரிசு' ஆகிய படங்கள் இருந்தன. 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஏஆர் ரஹ்மானும், 'வாரிசு' படத்திற்கு தமனும் இசையமைத்திருந்தனர். இந்தப் படங்களின் 'ஓஎஸ்டி' எனப்படும் ஒரிஜனல் சவுண்ட் டிராக்கை விரைவில் வெளியிடப் போவதாக இரண்டு இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.
'வாரிசு' ஓஎஸ்டி வெளியீடு குறித்து இசையமைப்பாளர் தமன், “'வாரிசு ஓஎஸ்டி வருவது 100 சதம் உறுதி, 25க்கும் மேற்பட்ட அற்புதமான டிராக்குகளுடன் வருகிறது. அதற்கான வேலைகளில் இருக்கிறேன். தற்போதுள்ள வேலைகளால் அதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதில் எனது மனதை வைத்து, அன்புடன் உங்களுக்கு அனுப்புவேன். நான் தாமதம் செய்துவிட்டேன் என எனக்குத் தெரியும். ஆனால், இந்த முறை மிஸ் செய்ய மாட்டேன். ஆகஸ்ட் 15, அதை பிரம்மாண்ட வழியில் கண்டிப்பாக வெளியிடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' ஓஎஸ்டி வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ரஹ்மான், “பிஎஸ்… இசை… வந்து கொண்டிருக்கிறது… பகுதி ஏ” எனக் குறிப்பிட்டுள்ளார்.