சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். தொடர்ந்து பில்லா-2 படத்தில் அஜித்துடனும் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார் வித்யுத் ஜாம்வால். மேலும் பொற்கோவிலில் நேர்த்திக்கடனின் ஒரு பகுதியாக அங்குள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்தும் இடத்திற்கு சென்று மணலால் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து சேவையும் செய்துள்ளார் வித்யுத் ஜாம்வால். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.