மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானது.
லண்டன் ஓட்டல் ஒன்றில் இருவரும் சாப்பிடும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரமானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான். இதனால் தான் சமந்தா உடன் நாக சைதன்யா விவாகரத்து பெற்றார் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் சோபிதா துலிபாலா அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "என்னை பற்றி பரவி வரும் காதல் வதந்திகள் யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் எப்போதும் கண்டு கொள்வதும், அதற்காக வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனம் இல்லை. அந்த வதந்திக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லாதபோது அவசரமாக பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதேபோல் எந்த தவறும் செய்யாதபோது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.