பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

'மாநாடு' படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியுள்ள படம் 'கஸ்டடி'. இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியா மணி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதால் நாளை வெளியாக உள்ள படங்களில் அதிக வியாபாரத்தை நடத்தியுள்ள படம் இதுதான். இப்படத்தின் தியேட்டர் உரிமை தெலுங்கில் சுமார் 18 கோடி அளவிற்கு நடந்துள்ளது. ஆனால், தமிழில் 3 கோடி அளவில்தான் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். கர்நாடகாவில் 1 கோடிக்கும், வெளிநாடுகளில் 3 கோடி வரையிலும் விற்கப்பட்டுள்ளதாம். மொத்தமாக சுமார் 25 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் நாக சைதன்யா என்றால் சமந்தாவின் முன்னாள் கணவர் என்ற அளவில்தான் தெரியும். இப்படம் இங்கு வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார் நாக சைதன்யா.




