''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மேற்கு தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய், ஆயிரத்தில் ஒருவன், கடல், திரௌபதி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆறுபாலா. தற்போது இயக்குனராக மாறி உள்ள ஆறுபாலா 'போர்குடி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ஆராதயா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை, அதாவது 'போர்குடி' என்று குறிப்பிடப்படும் ஒரு ஜாதியை உயர்த்தி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நெல்லையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆறுபாலா விளக்களித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ஒரு நல்ல நோக்கத்திற்காத்தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது தவறாக பயன்படுத்தப்படுவதால் இரு சமூக மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள். நிறைய இழப்புகளை சந்திக்கிறார்கள். அதைப் பற்றித்தான் இந்த படம் பேசுகிறதே தவிர எந்த ஜாதியை உயர்த்தியும், எந்த ஜாதியை தாழ்த்தியும் பேசவில்லை. ஆதிக்க சாதி. அதிகார வர்க்கம் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை பற்றி பேசுகிறது. அனைத்து சமூகமும் தங்களுடைய இழப்புகளை திரையில் காட்டி தங்களுடைய நியாயத்தை புரிய வைக்க எடுக்கும் முயற்சி போல் இந்த சமூகத்திற்கான இழப்புகளையும் நியாயத்தையும் புரிய வைக்கும் முயற்சி இது. என்றார்.