தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
கோடை விடுமுறைக் காலம் அதிக வெயிலோடு கடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதக் கடைசியில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலைக் கொடுத்த பிறகு கடந்த வாரம் மே 5ம் தேதி நான்கு சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தன. அப்படங்களுக்கு வரவேற்பும், வசூலும் கிடைக்கவில்லை.
நேற்று மே 12ம் தேதி “கஸ்டடி, பர்ஹானா, இராவண கோட்டம், குட் நைட், சிறுவன் சாமுவேல்” ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும் 'மியூசிக் ஸ்கூல்' என்ற டப்பிங் படமும் வெளிவந்துள்ளன. மேலே குறிப்பிட்ட படங்கள் 'கன்டென்ட்' படங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் வெளியீட்டிற்கு முன்பு இருந்தது. படம் வெளிவந்த பின்பு ஒவ்வொரு படம் பற்றியும் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் வெளிவந்துள்ளன.
நேற்று வெளியான படங்களில் ஒட்டு மொத்தமாக வரவேற்பைப் பெற்ற படமாக 'குட் நைட்' படம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பாராட்டி பல ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்தப் படத்திற்குப் பிறகே மற்ற படங்களுக்கான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.
வெளியீட்டிற்கு முன்பாக சர்ச்சைப் படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'பர்ஹானா, இராவண கோட்டம்' படங்களில் அப்படியான சர்ச்சை எதுவும் இல்லை என்பதும் படத்தைப் பார்த்த பிறகு பலரது கருத்தாக உள்ளது. சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சிறுவன் சாமுவேல்' படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
இந்த வாரம் போலவே வரும் மே 19 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் நான்கைந்து படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.