‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

தமிழ் சினிமாவில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகையான நயன்தாரா தான் 'உமன் சென்ட்ரிக்' எனப்படும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் நடிப்பவர். அவருக்கு அடுத்து அப்படியான படங்களில் நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
“கனா, திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, த கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி” என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் 'கனா' படம் அளவிற்கு வேறு எந்தப் படமும் வரவேற்பையும், அவருக்கு பெரிய பெயரையும் பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அப்படியான படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த விதத்தில் அவர் நடித்துள்ள 'பர்ஹானா' படம் இந்த வாரம் மே 12ம் தேதி வெளியாக உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. வாழ்வியல் சார்ந்த படமாக இப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'கனா' போன்ற பெயரை ஐஸ்வர்யாவுக்கு இந்த 'பர்ஹானா' பெற்றுத் தருவாரா ?.