ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் இரண்டு வாரங்களுக்கும் முன்பு மார்ச் மாதம் 29ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
டிரைலர் வெளியான யு டியூப் தளங்களில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. படத்தின் இசை உரிமையைப் பெற்ற டிப்ஸ் தமிழ் நிறுவனத்தின் யு டியூப் சேனலில்தான் முதலில் டிரைலர் வெளியானது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த டிரைலர் முடக்கப்பட்டது. பின்னர் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமையை வாங்கிய தனியார் டிவி நிறுவனம் அதன் யு டியூப் சேனலில் டிரைலரை வெளியிட்டது.
படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் மிகவும் பின் தங்கியே உள்ளது. முதல் பாகத்தின் டிரைலர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவன யு டியூப் சேனலிலும், இசை உரிமையைப் பெற்ற டிப்ஸ் தமிழ் நிறுவனத்தின் யு டியுப் சேனலிலும் வெளியானது. லைக்கா சேனலில் 11 மில்லியன் பார்வைகளும், டிப்ஸ் சேனலில் 19 மில்லியன் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது. இரண்டையும் சேர்த்தால் 30 மில்லியன் பார்வைகள், அதாவது 3 கோடி.
ஆனால், அடுத்த வாரம் வெளியாக உள்ள இரண்டாம் பாகத்தின் டிரைலர் கடந்த இரண்டு வாரங்களில் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் 18 மில்லியன் பார்வைகள் பின் தங்கியுள்ளது. டிரைலர் வெளியான நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தப் பின்னடைவா அல்லது இரண்டாம் பாகத்திற்கு இவ்வளவுதான் எதிர்பார்ப்பா என்பது கேள்விக்குரிய ஒன்றாக உள்ளது.