அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷனை கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறது படக்குழு. சோழர்களின் பயணம் என சுற்றுப் பயணம் ஒன்றை அவர்கள் ஆரம்பித்து ஊர் ஊராக பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது பெயருக்குப் பதிலாக, அவரவர் 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரப் பெயர்களை மாற்றினார்கள். கடந்த சில மாதங்களாகவே டுவிட்டர் தளத்தில் பல வித புதிய விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெயரை மாற்றினால் 'ப்ளூ டிக்' பறி போய்விடும்.
அதைப் பற்றித் தெரிந்தோ, தெரியாமலோ தங்களது பெயர்களை மாற்றி 'ப்ளூ டிக்'கைப் பறி கொடுத்துள்ளார்கள் த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி. த்ரிஷா 'குந்தவை' என்றும், ஜெயம் ரவி 'அருண் மொழி' என்றும் பெயரை மாற்றியதால் அவர்களது ப்ளூ டிக் பறி போய் உள்ளது. கார்த்தி, விக்ரம் இன்னும் அவர்களது பெயரை மாற்றவில்லை.
சோழர்களின் பயணத்தில் அடுத்தடுத்து சோதனைகளாக வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய கோவை நிகழ்வில் 'லியோ, லியோ' எனக் கேட்டு த்ரிஷாவை தவிக்க வைத்தார்கள். இன்று டுவிட்டர் தளம் ப்ளூ டிக்கை நீக்கியிருக்கிறது. சோழர்களுக்கு ஏன் இவ்வளவு சோதனை ?.