கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியான திரைப்படம் 'ருத்ரன்'. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியது ; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னிடம் லோகேஷ் கதை சொன்னார். ஆனால், அப்போது இருந்த கால்ஷீட் பிரச்னை காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை. அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். அது குறித்து நான் வருந்தவில்லை. விரைவில் லோகேஷ் கனகராஜும் நானும் ஒரு படத்திற்காக கண்டிப்பாக ஒன்றிணைவோம் எனத் தெரிவித்துள்ளார்.