'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! |

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கைவசம் இரண்டு தெலுங்கு படம், அவரின் 50வது படம் மற்றும் சமீபத்தில் தனது தயாரிப்பில் நடிக்கும் ஒரு படம் என வரிசையாக படங்கள் உள்ளன. தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சம்மதித்தால் முதல் முறையாக தனுஷ் படத்தில் வடிவேலு நடிக்கிறார் என ரசிகர்கள் இத்தகவலை மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் காமெடியனாக வடிவேலு தான் நடித்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் வெளியேறினார். அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் விவேக் நடித்தார். அப்போது இணையாமல் போன இவர்கள் கூட்டணி மீண்டும் இந்த படம் மூலம் இணைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.