ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக 2019ல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த வருடமே அதே மோகன்லால் நடித்த ப்ரோ டாடி என்கிற ஒரு நகைச்சுவை படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். இந்த நிலையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாகும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரித்விராஜ் அறிவித்திருந்தார்.
அடுத்தடுத்து மோகன்லால் பிரித்விராஜ் இருவருமே தொடர்ந்து பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தின் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இந்தப்படம் படமாக்கப்பட இருக்கிறது என்று ஏற்கனவே பிரித்விராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ், இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து லண்டனில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு மூன்றாவது நாளாக எம்பிரான் படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.