இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
திரைப்படங்களில் எப்போதாவது ஒரு படத்தில் ட்வின்ஸ் இருவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில்ட்வின்ஸ் ஆன இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒரே படத்தின் ஆளுக்கொருவர் கணவன் மனைவியாக நடித்துள்ள அதிசய நிகழ்வு சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி உள்ள பூக்காலம் என்கிற படத்தில் நடந்துள்ளது. நூறு வயது ஆன ஒரு மனிதரின் வாழ்வியலை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகர் விஜயராகவன் என்பவர் 100 வயது பூர்த்தி அடைந்த மனிதராக நடித்துள்ளார். அது மட்டுமல்ல மலையாள சினிமாவின் பிரபலங்களான வினீத் சீனிவாசன், மற்றும் இயக்குனர் பஸில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதே சமயம் இந்த படத்தில் இவர்களை எல்லாம் விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்கள் கமல்ராஜ் மற்றும் அமல்ராஜ் என்கிற ட்வின்ஸ் சகோதரர்களும் நவ்யா மற்றும் காவியா என்கிற ட்வின்ஸ் சகோதரிகளும் தான். இந்த ட்வின்ஸ்களில் ஒவ்வொருவருமே இந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். கதைப்படி இப்படி நான்கு கதாபாத்திரங்கள் அதாவது இரண்டு விதமான ஆண், பெண் ட்வின்ஸ் தேவைப்பட்டபோது இயக்குனர் கணேஷ் ராஜ் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இவர்களை கண்டுபிடித்து அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார்.
இதில் அமல்ராஜ், கமல்ராஜ் சகோதரர்கள் கல்லூரி மற்றும் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நவ்யா மற்றும் காவியா சகோதரிகள் ஐடி நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே வாழும் கலை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.