இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? |
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வரும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தைவானில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. 8 நாட்கள் அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர், அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கப் போகிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் படப்பிடிப்பே இந்தியன்-2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு, தான் தைவான் சென்றுவிட்ட தகவலை ஒரு புகைப்படத்தின் மூலம் கமலஹாசன் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கரும் தைவானில் தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.