2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார். இதை ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படம் ஆக்சன் திரில்லர் கதையில் உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் காமெடி கலந்த கமர்சியல் கதைகளாகவே நடித்து வரும் சிவகார்த்திகேயன், காக்கிச்சட்டை படத்தில் ஆக்ஷன் கதையில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் அதிரடியான ஒரு ஆக்சன் கதையில் அவர் களம் இறங்குகிறார். அதோடு இதுவரை இல்லாத அளவுக்கு தனது கெட்டப்பையும் இந்த படத்திற்காக மாற்றப் போகிறாராம் சிவகார்த்திகேயன்.