ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக, எப்போதும் பிஸியான நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஒரு பக்கம் முழு படத்தையும் தாங்கி நிற்கும் ஹீரோவாக ஜெயிலர் படத்திலும், இன்னொரு பக்கம் தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் கொஞ்ச நேரமே வந்து போகும் கெஸ்ட் ரோலிலும் நடிக்கிறார் ரஜினி. அதுமட்டுமல்ல பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என இயக்குனர் மணிரத்னத்திடம் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூட கடந்த வருடம் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வின் பேசினார் ரஜினி.
இந்த நிலையில் மேடை நாடகம் ஒன்றில் நடிக்க விரும்புவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரஜினிகாந்த். சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி கட்டியுள்ள கலாச்சார மையம் திறப்பு விழாவில் தனது இளைய மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 2000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் விதமாக அந்த அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு முற்றிலும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த அரங்கையும், அதில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளையும், அதற்காக மெனக்கெட்டிருந்த நீட்டா முகேஷ் அம்பானிக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்ல இந்த அரங்கில் மேடை நாடகம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் விரைவில் அது நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.