'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

கடந்த ஒருவாரமாகவே இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திய முழுக்க பாதிப்பு நாலாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லை என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தேவையில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிறது. ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்கங்கள், ஏசி அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனிமேல் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.