போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பொங்கல், தீபாவளி தவிர திரைப்படங்களின் வெளியீட்டில் முக்கியமான பண்டிகை நாளான தமிழ்ப் புத்தாண்டு அன்றும் பல படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் எல்லாமா மாறிப் போனது.
இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்', யோகிபாபு நடித்துள்ள 'யானை முகத்தான்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி', மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி', அருள் நிதி நடித்துள்ள 'திருவின் குரல்', ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றுடன் தெலுங்கில் சமந்தா நடித்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படமும் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிறது.
இந்த வருட தமிழ்ப் புத்தாண்டிற்கு இதுவரையில் 6 நேரடி தமிழ்ப் படங்களின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேருமா அல்லது நீங்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.