குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார்கள். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் 1970களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்டுவர்ட்புரம் என்ற பகுதியை சேர்ந்த ரயில் திருடன் நாகேஸ்வரராவை பற்றிய உண்மை கதை. இவன் சிறையில் இருந்து தப்பிப்பதில் திறமைசாலி. 20 முறை சிறையில் இருந்து தப்பித்திருப்பதாக கூறுவார்கள். இவன் சிறையில் இருந்து தப்பிப்பதை வைத்தே சிறையின் பாதுகாப்பு விதிகளை மாற்றியதாக கூறப்படுவதுண்டு.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. டைகர் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற அக்டோபர் 20ம் தேதி நவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.