பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோவாக கலக்கி வந்தவர் சதீஷ். சமீபத்திய எபிசோடுகளில் அவரது கேரக்டரை குறைத்து காமெடியனாகவே மாற்றிவிட்டனர். போதாக்குறைக்கு ரஞ்சித் வேறு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து பாக்கியலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். ரஞ்சித்தின் என்ட்ரி குறித்து முன்னரே பதிவிட்டிருந்த சதீஷ், இனி பாக்கியலெட்சுமி தொடரில் தனது கேரக்டர் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கேற்றார் போல் தற்போது பெட்டிக்கடையில் நின்று டீ ஆத்துவது போல் புகைப்படத்தை வெளியிட்டு 'கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டீனில் டீ மாஸ்டரா சேர போறேன்' என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் சிலர் 'கடைசியில ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற நிலைமைக்கு வந்துட்டீங்களே கோபி!' என கிண்டலடித்து வருகின்றனர்.