ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடர் அண்மையில் நிறைவுற்றது. இதில், அக்ஷய் கமல் ஹீரோவாக நடித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா ஹீரோ போல் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து பலரும் இவரை சினிமாவில் நடிக்க சொல்லி கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அக்ஷய் கமல் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் 4 என்கிற திரைப்படத்தில் அக்ஷய் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இதில் சின்னத்திரை நடிகர்களான மைக்கேல், கேப்ரில்லா செல்லஸ், வினுஷா தேவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்ஷய் கமலுக்கு ஜோடியாக இன்ஸ்டாகிராம் வைரல் அழகி பிரக்யா நக்ராவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் அக்ஷய் கமல் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் அவரது சினிமா கேரியர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.