எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
'சுந்தரி' சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இதேபோல் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா. இருவருமே சமூக வலைத்தளத்தின் மூலம் புகழ்பெற்று சின்னத்திரைக்கு வந்தவர்கள். உலகம் கேலி செய்த தங்கள் நிறத்தையே மூலதனமாக்கி ஜெயித்தவர்கள். இதில் கேப்ரில்லா நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். வினுஷாவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இருவருமே என் 4 என்ற படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 17ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
கேப்ரில்லா கூறும்போது “நான் மீனவ பெண்ணாகவும், வினுஷா மாற்றுத்திறனாளியாகவும் நடித்துள்ளோம். ஒரு சம்பவத்தில் 3 ஜோடிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புப்படுத்தி நகரும் கதையாக தயாராகி உள்ளது. ஒரு சிறிய தவறு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பது கருவாக இருக்கும்'' என்றார்.