விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2010-ல் நடித்து வெளியான படம் வருடு. குணசேகர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்திருந்தார். இவர் டுவிட்டரில் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் திடீரென இவரது டுவிட்டர் கணக்கை தன்னை பின் தொடர்வதில் இருந்து பிளாக் செய்தார்.
இதனால் அதிர்ச்சியான பானு ஸ்ரீ இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “நான் யார் என்று நினைத்து குழம்ப வேண்டாம்.. அல்லு அர்ஜுனுடன் வருடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.. அதன்பிறகு எனக்கு இப்போதுவரை பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து நகைச்சுவையாக இருப்பது எப்படி என கற்றுக் கொண்டேன். இதோ இப்போது அல்லு அர்ஜுன் கூட என்னை அவரது டுவிட்டரில் பின்தொடர முடியாமல் பிளாக் செய்துள்ளார்” என்று விரக்தியுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அப்படி பிளாக் செய்த மூன்று மணி நேரத்திலேயே மீண்டும் பானு ஸ்ரீ தன்னை பாலோ செய்யும் விதமாக அன்பிளாக் செய்து விட்டார் அல்லு அர்ஜுன். ஆனால் அதற்குள் அவரைப்பற்றி தவறாக பேசி விட்டோமே என உணர்ந்த பானு ஸ்ரீ உடனே மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், “கிரேட் நியூஸ்.. அல்லு அர்ஜுன் என்னை அன் பிளாக் செய்துவிட்டார்.. எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற அர்த்தத்தில் அவரை நான் தவறாக எதுவும் பேசவில்லை. என்னுடைய போராட்டத்தில் இப்போதும் நகைச்சுவைகளை கண்டுகொண்டு இன்னும் முன்னோக்கி செல்லவே முயற்சித்து வருகிறேன். எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுனுக்கு நன்றி” என்று கூறி சமாளித்துள்ளார்.